2030ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்து, ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். 2025ஆம் ஆண்டு முதல் 150 சிசி எஞ்சின் திறன் கொண்ட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் கூறி இருந்தது. தற்போது 2030ஆம் ஆண்டு முதல் மின்சாரக்கார்கள் மற்றும் வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளது. இந்த இலக்கை மட்டும் வகையில் திட்ட வரைவு தயாரிக்க சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மின் நெடுஞ்சாலைகள் அமைக்கவும், 50 ஜிகாவாட் ஹவர் பேட்ட ரிகள் தயாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் ஆலோசித்து திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.